ஏதென்ஸ், 12 ஏப்ரல் (பெர்னாமா) - கிரேக்கத்தின் ஏதென்ஸ்சில் உள்ள ஹெலெனிக் இரயில் அலுவலத்திற்கு வெளிப்புறத்தில் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
இச்சம்பவத்தில் காயம் ஏற்பட்டவர்கள் குறித்து உடனடி தகவல்கள் கிடைக்கவில்லை
35 நிமிடங்களுக்குள் அங்கு வெடிப்பு சம்பவம் ஏற்படும் என்று இரண்டு கிரேக்க ஊடக நிறுவனங்களுக்கு கிடைத்த எச்சரிக்கை அழைப்பைத் தொடர்ந்து, போலீசார் அப்பகுதிக்குச் சென்றனர்.
கட்டிடத்திற்கு வெளிப்புறத்தில் சந்தேகத்திற்குரிய பை ஒன்று காணப்பட்டதை அடுத்து அதையும் அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
தாம் தங்கும் விடுதியை விட்டு வெளியேறிய ஐந்து நிமிடத்தில் அங்கு வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டதாக 50 வயதுடைய சமையல் கலைஞர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், வெடி சம்பவத்திற்கான காரணம் தற்காலிக கையெறி குண்டுதான் என்று தெரிய வந்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)