பொது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யும் நடவடிக்கையை ஜே.கே.டி.எம் முறியடிப்பு

07/04/2025 07:39 PM

குவாந்தான், 07 ஏப்ரல் (பெர்னாமா) --   41 லட்சத்து 7 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ஈயம், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் நடவடிக்கையைப் பஹாங் மாநில அரச மலேசிய சுங்கத் துறை, ஜேகேடிஎம் முதல் முறையாக முறியடித்துள்ளது.

கடந்த மார் 11-ஆம் தேதி, அதிகாலை மணி 2 அளவில், ரொம்பின் அருகிலுள்ள படகுத்துறையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், 23-லிருந்து 53 வயதிற்கு உட்பட்ட ஒரு மலேசியரும் நான்கு இந்தோனேசிய ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக மாநில ஜேகேடிஎம் இயக்குநர், முஹமட் அஸ்ரி செமான் தெரிவித்தார்.

வெள்ளை நிற சாக்குகளில் வைக்கப்பட்டிருந்த ஈய உலோகம், லாரி ஒன்றில் இருந்ததை சுங்கத்துறை கண்டறிந்தது.

மேலும், படகுத்துறையில் உள்ள கப்பல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அதிலுள்ள சேமிப்பு பகுதியில் அதே கனிமப் பொருள் கண்டெடுக்கப்பட்டது.

600 சாக்கு மூட்டைகள் கைப்பற்றப்பட்ட வேளையில், ஒவ்வொன்றும் 50 கிலோகிராம் எடையில் இருந்தன.

அண்டை நாட்டில் இருந்து சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாமல் அந்த கனிம வளங்களை இறக்குமதி செய்தவதே அந்த கும்பலின் நடவடிக்கையாகும்.

1967-ஆம் ஆண்டு சுங்கச் சட்டம் செக்‌ஷன் 116சி-யின் கீழ் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)