பொது

பெண்ணைத் தலையில் குத்திய குற்றச்சாட்டை இராணுவ வீரர் மறுத்துள்ளார்

07/04/2025 07:41 PM

சிரம்பான், 07 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த மார்ச் 29-ஆம் தேதி, செனாவாங் தாமான், சத்ரியாவில், பெண் ஒருவரை தலையில் குத்தியதாக சிரம்பான் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, இராணுவ வீரர் ஒருவர் மறுத்து விசாரணைக் கோரினார்.

இரவு மணி 10.20 அளவில், 28 வயதான ஷயிரா முஹ்மட் ஷாருமை வேண்டுமென்றே தலைப் பகுதியில் குத்தியதாக 35 வயதான அப்துல் ஹபிஸ் அபு பாக்கார் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றவியல் சட்டம், செக்‌ஷன் 323-ரின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்படால், அதிகபட்சமாக ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது 2,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

2,000 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க,
மஜிஸ்திரேட் சைட் ஃபாரிட் சைட் அலி அனுமதியளித்தார்.

பின்னர், இவ்வழக்கு, மே 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)