விளையாட்டு

ஒழுங்கு விதிகளை மீறியதற்காக எம்பாப்பேவுக்கு அபராதம்

05/04/2025 08:22 PM

மெட்ரிட்,05 ஏப்ரல் (பெர்னாமா) -- அடிப்படை ஒழுங்கு விதிகளை மீறியதற்காக, ரியல் மெட்ரிட் முன்னணி தாக்குதல் நட்சத்திரம் கலியன் எம்பாப்பே மற்றும் இதர மூன்று ஆட்டக்காரர்களுக்கு எதிராக, ஐரோப்பிய காற்பந்து சம்மேளனம் அபராதம் விதித்துள்ளது. 

ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண காற்பந்து போட்டியில் 16 குழுக்களுக்கான சுற்றில் அட்லாடிகோ மெட்ரிட்டை சந்திக்கும் போது, மூன்று ரியல் மெட்ரி ஆட்டக்காரர்கள் ஒழுக்க விதிகளை மீறியுள்ளனர். 

அதற்காக அவர்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

எம்பாப்பேவுக்கு 30 யூரோ டாலரும். தற்காப்பு ஆட்டக்காரர் அந்தோனியோ ருடிகெர் 40 யூரோ டாலரும் மத்திய திடல் ஆட்டக்காரர் டானி செபலொஸ் 20 ஆயிரம்  யூரோ டாலரும் அபராதமாக விதிக்கப்பட்ட்ருக்கின்றது. 

ஆயினும், பிரேசிலின் தாக்குதல் ஆட்டக்காரர் வினிசியஸ் ஜூனியருக்கு எந்தவொரு அபராதமும் விதிக்கப்படவில்லை. 

அதேவேளையில்  எம்பாப்பேவுக்கும் ருடிகெருக்கும் ஓர் ஆட்டத்தில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆர்செனலுக்கு எதிரான ஆட்டத்தில் அந்தத் தடை அமல்படுத்தப்படாது என்று கூறப்பட்டுள்ளது. 

இவர்கள் தவறு என்ன வென்பதை,  ஐரோப்பிய காற்பந்து சம்மேளனம் தெளிவாக விளக்கவில்லை. 

11-வது பிரிவின் படி அவர்கள் ஒழுங்கு விதிகளை மீறியதாக மட்டுமே கூறப்பட்டிருக்கின்றது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)