சுபாங் ஜெயா, 08 ஏப்ரல் (பெர்னாமா) -- புத்ரா ஹைட்ஸ் எரிவாயு வெடிப்பு சம்பவ பகுதியில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட 437 வீடுகளில் 270 குடியிருப்பதற்கு பாதுகாப்பானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நேற்று அறிவிக்கப்பட்ட 151 வீடுகளைக் காட்டிலும் தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளையும் தொழில்நுட்பக் குழுவினர் மதிப்பீடு செய்தப் பின்னர் இந்த எண்ணிக்கை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
''இன்று தீயணைப்புப் படையினரும் மதிப்பீடு செய்த 437 வீடுகளில் 270 வீடுகள் குடியிருப்பதற்கு பாதுகாப்பானவையாகும். அவற்றில் சிலவற்றில் சிறிய சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,'' என்றார் அவர்.
மேலும், 325 மீட்டர் தூரத்திற்குள் இருந்த 571 வாகனங்களில் 88, 50 விழுக்காட்டிற்கும் மேல் சேதமடைந்துள்ளன.
அதோடு, 332 வாகனங்கள் 50 விழுக்காட்டிற்கும் குறைவாக சேதமடைந்துள்ள வேளையில் 151 எந்த சேதமும் அடையவில்லை.
இச்சம்பவத்தில், சொத்துக்கள் எதுவும் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வமாக எந்தவொரு புகாரும் இதுவரை பெறப்படவில்லை.
இத்தீ விபத்தில் உயிரிழப்பு சம்பவம் பதிவானதாகவும் தங்கள் தரப்பு அதை மறைப்பதாகவும் கூறப்படுவதையும் ஹுசேன் ஒமார் மறுத்துள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)