லண்டன், 08 ஏப்ரல் (பெர்னாமா) -- மென்செஸ்டர் சிட்டியின் மத்திய திடல் ஆட்டக்காரர் கெவின் டி ப்ரூயின் அக்கிளப்பில் இருந்து விடைபெறவிருக்கின்றார்.
இனிமேல் இது ஒரு ரகசியமல்ல என்று கூறிய பெல்ஜிய காற்பந்து நட்சத்திரமான அவர் இப்பருவத்தில் இறுதியில் சிட்டியை விட்டு வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரிமியர் லீக்கில் தற்போது, வெற்றியாளர் கிளப்புடன் கடைசி மாதத்தில் இருப்பதாக 33 வயதான கெவின் டி ப்ரூயின் தமது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதோடு, சிட்டியுடன் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த தருணங்களை தாம் அனுபவித்ததாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.
சிட்டி கிளப்பும் அதன் ரசிகர்களும் தமக்கு ஆதரவோடு அனைத்தையும் கொடுத்ததாகவும் அவர் கூறினார்
2015 இல் சிட்டிக்கு வந்தது முதல், அக்கிளப்பிற்கு ஆறு பிரீமியர் லீக் மற்றும் சாம்பியன்ஸ் லீக் பட்டங்களை வெல்ல ப்ரூயின் உதவியுள்ளார்.
கடந்த இரண்டு பருவங்களில், சிட்டி அணியுடனான அவரது செல்வாக்கு குறைந்தது. பயிற்சி அரங்கில் பிரச்சனைகள் போன்றவை அவரது நற்பெயரைப் பாதித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)