பொது

இறுதி பாதுகாப்பு மதிப்பீடு பணிகள் நாளை நிறைவடையலாம்

05/04/2025 08:01 PM

புத்ரா ஹைட்ஸ், 05 ஏப்ரல் (பெர்னாமா) -- சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்ட பள்ளத்தில், இறுதி பாதுகாப்பு மதிப்பீடு பணிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சிலாங்கூர் மாநில பேரிடர் நிர்வகிப்பு செயற்குழுவிடம் அது விரைவில் வழங்கப்படும் என்று, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

தீச்சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஏற்பட்ட பள்ளமான பகுதி மட்டுமே இறுதி பாதுகாப்பு மதிப்பீட்டில் உட்படுத்தப்பட்டுள்ளது என்றும்..

பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்பு பகுதிகள் இல்லை என்றும் பெர்னாமா தொடர்புக் கொண்ட போது டத்தோ நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

நேற்று மழை பெய்ததைத் தொடர்ந்து, சம்பவம் நிகழ்ந்த பள்ளமான பகுதியில் உள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை தீயணைப்பு துறை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இந்த வெடிப்பு சம்பவத்தின் தொடக்கட்ட விசாரணை அறிக்கைகள் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ உசேன் ஒமார் கான் நேற்று தெரிவித்திருந்தார்.

வெடிப்பின் தாக்கத்தால் அப்பகுதியின் கட்டமைப்பு அல்லது நிலப்பரப்பும் மாறியதாக அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)