சியோல், 04 ஏப்ரல் (பெர்னாமா) -- அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டு கடமையை மீறிய குற்றத்திற்காக யூன் சுக் இயோல் தென் கொரிய அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தென் கொரியாவின் இடைக்கால தலைமை நீதிபதி மூன் ஹியூங்-பே அந்த தீர்ப்பை வழங்கினார்.
''அனைத்து மக்களின் அதிபராக தம்மை ஆதரிக்கும் மக்களைத் தாண்டி சமூகத்தை ஒன்றிணைக்கும் கடமையை அவர் மீறியுள்ளார்'', என்று அவர் கூறினார்.
அதிபர் நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் அரசியலமைப்பின் படி அடுத்த 60 நாள்களுக்குள் அதிபர் தேர்தல் நடைபெற வேண்டும்.
அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் யூன், தற்போது கிளர்ச்சியை தூண்டிய குற்றச்சாட்டில் குற்றவியல் விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)