உலகம்

உள்நாட்டுப் போரை நிறுத்திக் கொள்ள மியன்மார் இராணுவம் ஒப்புதல்

04/04/2025 03:48 PM

மண்டலே, 04 ஏப்ரல் (பெர்னாமா) - நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கிலும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளும் வகையிலும் உள்நாட்டு போரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு மியன்மார் இராணுவம் ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.

பேரழிவுக்குப் பிறகு நாட்டு மக்களின் மறுவாழ்வை எளிதாக்குவதற்காக போர்நிறுத்தம் செய்யப்படுவதாக இராணுவம் கூறியது.

2021-ஆம் ஆண்டு ஆங் சான் சூகியின் அரசாங்கத்தை கவிழ்த்து மியன்மார் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

இராணுவ ஆட்சியை எதிர்க்கும் பொருட்டு அந்நாட்டில் உருவான கிளர்ச்சிப்படைகள் இராணுவம் மீது தாக்குதல்கள் மேற்கொண்டு வருகின்றன.

இதனால், அந்நாட்டில் உள்நாட்டுப் போர் மூண்டுள்ளது.

கடந்த மாதம் 28-ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது.

மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)