வாஷிங்டன் டி.சி, 04 ஏப்ரல் (பெர்னாமா) -- உலகின் முக்கியமான நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விதித்திருக்கும் வரி விதிப்பு, உலக பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், அமெரிக்காவின் தொழிழ்துறையின் நிலத்தன்மையும் பாதிக்கும் என்று அந்நாட்டின் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
''உள்ளுர் உற்பத்திகள் மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்புகளை ஆதரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். ஆனால், இந்த கட்டத்தில் வணிகங்கள் (அமெரிக்க நிறுவனங்கள்) இதற்கு எவ்வாறு பதிலளிக்கப் போகின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் எங்களுக்கு நிச்சயமற்ற தன்மை உள்ளது. இந்த வரி அமலாக்கத்தினால் அதிகமாக பாதிக்கப்படப் போகும் துறைகள் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது,'' என்றார் அவர்.
அமெரிக்காவின் இறக்குமதி பொருள்களுக்கு உலக நாடுகள் விதிக்கும் அதே வரியை, அமெரிக்காவும் வரி விதிக்கவுள்ளதாக் டோனல்ட் டிரம்ப் முன்னதாக கூறியிருந்த நிலையில், அதற்கான உத்தரவில் நேற்று கையெழுத்திட்டார்.
இது பரஸ்பர வரிவிதிப்பு என்று கூறப்படுகிறது.
மேலும், இது ஒரு வர்த்தகக் கொள்கையாகும்.
ஒரு நாடு ஏற்றுமதியை விட அதிகமாக இறக்குமதி செய்யும் போது ஏற்படும் வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய இந்த வரி அமல் படுத்தப்படுகிறது.
அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை அதிக விலை கொண்டதாக மாற்றுவதன் மூலம், பிற நாடுகள் விதிக்கும் வர்த்தக வரிகளை குறைப்பதே இதன் நோக்கமாகும்.
இதனை கருத்தில் கொண்டே, மலேசியா, இந்திதோனேசியா, சிங்கப்பூர், இந்தியா, சீனா, இலங்கை, பிரிட்டன் உட்பட சுமார் 100 நாடுகள் மீது டிரம்ப் வர்த்தக வரிகளை விதித்துள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)