உலகம்

மியன்மார் இராணுவத் தலைவருடன் மோடி சந்திப்பு

04/04/2025 01:26 PM

பேங்காக், 04 ஏப்ரல் (பெர்னாமா) -- பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, தாய்லாந்து பேங்காக்கிற்கு சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மியன்மாரின் இராணுவ தலைவர் மின் அவுங் ஹிலையிஙை இன்று சந்தித்தார்.

இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்றுடன் நிறைவடையும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி மாநாட்டில் தாய்லாந்து, மியன்மார், இந்தியா, வங்காளதேசம், நேபாளம், இலங்கை மற்றும் புத்தான் ஆகிய நாடுகள் கலந்து கொண்டன.

அண்மையில், கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு இந்தியா உதவிக் கரம் நீட்டியுள்ளது.

மருத்துவ பொருள்கள் உட்பட தேடல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட தனது மீட்புக் குழுவினரை இந்தியா மியன்மாருக்கு அனுப்பியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)