கோலாலம்பூர், 03 ஏப்ரல் (பெர்னாமா) - நோன்புப் பெருநாள் விடுமுறைக்குப் பின்னர் சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் தலைநகருக்குத் திரும்ப உள்ளதால், நாளை தொடங்கி அடுத்த மூன்று நாள்களுக்கு தினசரி 20 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலையைப் பயன்படுத்தலாம் என்று பிளஸ் மலேசியா நிறுவனம் கணித்திருக்கிறது.
ஏப்ரல் 4,5 மற்றும் 6-ஆம் தேதிகளில், கோலாலம்பூருக்கு அதிகமானோர் பயணிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பதால் பிளஸ் செயலியில் உள்ள MyPLUS-TTA எனும் பயண அட்டவணையைப் பின்பற்றி பயணங்களைத் திட்டமிடுமாறு நெடுஞ்சாலை பயனர்களுக்கு பிளஸ் அறிவுறுத்தியிருக்கிறது.
நெடுஞ்சாலை பயனர்கள் தங்கள் பயணங்களை மிகவும் எளிதாக திட்டமிட உதவும் வகையில் MyPLUS-TTA பயண அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிளஸ் கூறியது.
மேலும், இந்த அட்டவணையை ஊக்குவிக்கும் வகையில், MyPLUS-TTA-வை முழுமையாக பயன்படுத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனருக்கு 20,000 ரிங்கிட் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)