பொது

எரிவாயு குழாய் வெடிப்பு: சேதம் குறித்து இதுவரை 108 போலீஸ் புகார்கள்

03/04/2025 07:35 PM

புத்ரா ஹைட்ஸ், 03 ஏப்ரல் (பெர்னாமா) -- புத்ரா ஹைட்ஸ் வெடிப்பு சம்பவத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்றுவரை போலீசார் 108 புகார்களைப் பெற்றுள்ளனர்.

எனினும், திருட்டுச் சம்பவம் தொடர்பிலான எந்தவொரு புகாரையும் இதுவரை பெறவில்லை என்று, உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.

''குடியிருப்பாளர்கள் இல்லாத வீடுகளை போலீசார் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர். சேதம் குறித்து 108 புகார்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. இது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார் அவர்.

இன்று, புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலி நிவாரண மையம், பி.பி.எஸ்-இல் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களிடம் மை கார்ட் அட்டையை ஒப்படைத்தப் பின்னர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷம்சூல் அன்வார் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷம்சூல் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பி.பி.எஸ் உட்பட சம்பவம் நிகழ்ந்த இடத்தில் போலீஸ் உறுப்பினர்கள் 116 பேரும், தேசிய பதிவுத் துறை ஊழியர்கள் 30 பேரும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மக்களிடையே குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க, எரிவாயு குழாய் தீ விபத்து குறித்து தவறான செய்திகளைப் பகிர வேண்டாம் என்று அவர் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)