உலகம்

குஜராத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து; 18 பேர் உயிரிழப்பு 

02/04/2025 03:11 PM

குஜராத், 02 ஏப்ரல் (பெர்னாமா) - இந்தியாவில் பட்டாசு தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வெடிப்பினால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் பலகை ஒன்று இடிந்து விழுந்ததே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து ஐந்து தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

மேலும், பலர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மேற்கு வங்காளத்தில் திங்கட்கிழமை இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

அங்கு ஒரு பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது அறுவர் உயிரிழந்தனர்.

இந்தியாவில்  தொழில்துறை விபத்துகள் வழக்கமான ஒன்றாகும்.

மக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதும், அரசு அதிகாரிகளின் கவனக்குறைவான பரிசோதனைகளும் பெரும்பாலும் இதற்கு காரணமாகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)