பொது

பாதிக்கப்பட்ட பகுதியில் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியை ஜேபிபிஎம் தொடங்கியது

02/04/2025 02:37 PM

புத்ரா ஹைட்ஸ், 02 ஏப்ரல் (பெர்னாமா) - புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வாகனங்களின் இழப்பை மதிப்பிடுவது உட்பட சில முக்கியப் பணிகளை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஜேபிபிஎம் இன்று தொடங்கியது. 

அதேவேளையில், மீண்டும் அங்கு தீச்சம்பவம் ஏற்பட்டால், அதை சமாளிக்கும் வகையில், தீயணைப்பு குழு ஒன்றும் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஜேபிபிஎம் தலைமை இயக்குநர் டத்தோ நோர் இஷாம் முஹமட் தெரிவித்தார்.  

''முதலாவதாக டிஎன்பியுடன் இணைந்து மின்சாரம் தொடர்பான நிலைமையை குறிப்பாக, மின்சார கேபிள்களை எவ்வாறு மதிப்பிடுவது என்பதைப் பார்ப்போம். அதிலும் வெளியே தெரியும் அக்கம்பிகள் பாதுகாப்பானதா அல்லது அந்த பகுதியில் விரைவில் இணைப்புகளை ஏற்படுத்துவதற்கு மேலும் நடவடிக்கை தேவையா என்பதையும் அறிய முனைவோம்,'' என்றார் அவர்.

இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் அத்தகவல்களை வழங்கினார்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தீப்பிடித்த அல்லது பாதிக்கப்பட்ட வீட்டின் கட்டமைப்பு குறித்தும் தீயணைப்புப் படையினர் கவனம் செலுத்தி வருவதாகவும் நோர் இஷாம் முகமட் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)