காஜாங், 04 ஏப்ரல் (பெர்னாமா) -- மே மாதம் நிறைவுப் பெறவுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம்-மின் தலைமை ஆணையர், டான் ஶ்ரீ அசாம் பாக்கியின் பதவி ஒப்பந்தம் தொடர்பான முடிவைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பார்.
ஒப்பந்தம் நீட்டிப்பு குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படாததால், அனைத்துலக செய்தி தளம் ஒன்று வெளியிட்ட செய்தியையும் அவர் மறுத்துள்ளார்.
''முடிவு கிடைத்த பிறகு, முடிவு செய்த பிறகு நான் அறிவிக்கின்றேன். கூடிய விரைவிலா? அவரும் இன்னும் முடிக்கவில்லை. (ஒப்பந்தம்)'', என்று அவர் கூறினார்.
2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம், டான் ஶ்ரீ அசாம் பதவியேற்றதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக, அவரின் ஒப்பந்தத்தை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க அன்வார் அனுமதி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கடந்த வியாழக்கிழமை இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
2023-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி, அசாம் பாக்கியின் ஒப்பந்தம் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், அடுத்தாண்டே மேலும் ஒரு வருட நீட்டிப்பும் வழங்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)