சீனா, 10 ஏப்ரல் (பெர்னாமா) -- நிங்போவில் இன்று நடைபெற்ற ஆசிய பூப்பந்து போட்டி, பி.ஏ.சி-இல் நாட்டின் கலப்பு இரட்டையர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
தாய்லாந்தைச் சேர்ந்த டெச்சாபோல் புவாரானுக்ரோ மற்றும் சுபிசாரா பாவ்சம்பிரான் ஜோடியை வீழ்த்தி கோ சூன் ஹுவாட், ஷெவோன் லாய் ஜெமி இணை தங்களின் கடந்த தோல்வியை ஈடு செய்துள்ளனர்.
39 நிமிடங்கள் நீடித்த இவ்வாட்டத்தில் அந்த கணவன் மனைவி தம்பதியர் 21-17, 21-14 என்ற நேரடி செட்களில் எளிதில் வெற்றி பெற்றனர்.
நாளை நடைபெறவிருக்கும் காலிறுத்து ஆட்டத்தில் அந்த ஜோடி இந்தோனேசியாவைச் சேர்ந்த ஜாபர் ஹிடாயத்துல்லா-பெலிஷா பசாரிபு ஜோடியை சந்திக்கவுள்ளது.
இதனிடையே, நாட்டின் ஆடவர் ஒற்றையர் ஆட்டக்காரர் ஜஸ்டின் ஹோவும் மகளிர் ஆட்டக்காரர் கோ ஜின் வெய்யும் இரண்டாவது சுற்றிலேயே ஆட்டத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஜஸ்டின் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஜோனாதன் கிறிஸ்டியிடம் 13-21, 19-21 என்ற புள்ளிகளில் தோல்வி கண்ட நிலையில், ஜின் வெய் தாய்லாந்தைச் சேர்ந்த சுபானிடா கேட்டோங்கிடம் 15-21, 16-21 என்ற புள்ளிகளில் வீழ்ந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)