பொது

ஆயர் கூனிங்; வேட்புமனு தாக்கலின் போது காலையில் மழை பெய்யலாம்

10/04/2025 05:58 PM

ஈப்போ, 10 ஏப்ரல் (பெர்னாமா) -- வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும், ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் போது, காலையில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதே நாளில், பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருப்பதாக மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்களின் பயணத்தை சிறந்த முறையில் திட்டமிடுவதோடு, அண்மைய மற்றும் துல்லியமான வானிலை குறித்த தகவல்களை அறிந்து கொள்ள மெட்மலேசியாவின் www.met.gov.my என்ற அகப்பக்கத்தையும் நாடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அவற்றுடன் 'Google Play' மற்றும் 'App Store'-இல் myCuaca செயலியையும் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் நினைவூட்டப்படுகின்றனர்.

ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறும் என்றும் இடைத்தேர்தலை முன்னிட்டு வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 12-ஆம் தேதியும், முன்கூட்டியே வாக்காளிப்பு ஏப்ரல் 22-ஆம் தேதியும் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம், எஸ்.பி.ஆர் அறிவித்திருக்கிறது.

கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி, ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினரான 59 வயது இஷ்ஹாம் ஷாருடின் காலமானதை தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)