கோலாலம்பூர், 27 மார்ச் (பெர்னாமா) - பிரச்சினைகளை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதோடு இஸ்லாமிய ஒழுக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் சில தரப்பினரின் நடவடிக்கைகளையும் பிரதமர் சாடினார்.
பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் இயல்பானது என்றாலும் அவை சண்டைகளுக்கு வித்திடக் கூடாது என்று அவர் நினைவுறுத்தினார்.
"எனக்குப் புரிகிறது. நம் நாட்டில் முன்வைக்கப்படும் பல்வேறு கருத்துகள், அரசியல் சண்டைகள், கருத்து மோதல்கள் ஆகியவை சில சமயங்களில் அதிக பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு மக்களைத் தண்டிக்கவும் செய்கிறது. அதேவேளையில், மக்களை இழிவுபடுத்தவும் வெறுக்கவும் ஒரே கட்சியில் அல்லது மதத்தில் புறக்கணிக்கப்படவும் அவமானப்படுத்தவும் காரணமாகிறது. ஆனால் இஸ்லாம் அப்படியல்ல," என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)