விளையாட்டு

தகுதி ஆட்டத்தில் நேப்பாளை வீழ்த்தியது மலேசியா

26/03/2025 07:19 PM

கோலாலம்பூர், 26 மார்ச் (பெர்னாமா) -- 2027-ஆம் ஆண்டு ஆசிய கிண்ண காற்பந்து போட்டிக்கான தகுதி ஆட்டம்...

சுல்தான் இப்ராஹிம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற F குழுக்கான போட்டியில், நேப்பாளத்தை 2-0 என்ற புள்ளி கணக்கில் மலேசியா வீழ்த்தியது.

புதிய பயிற்சியாளர் பீட்டர் கிளமோவ்ஸ்கி இன் கீழ், விளையாடிய தேசிய அணி முதல் பாதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், எதிரணியின் தற்காப்பு ஆட்டம், வலுவாக இருந்தது.

ஆட்டத்தின் 29-ஆவது நிமிடத்தில் ஹரிமாவ் மலாயாவின் புதிய விளையாட்டாளர் ஹெக்டர் ஹெவெல் ஒரு கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதனிடையே, இரண்டாம் பாதி ஆட்டத்தின் 60-ஆவது நிமிடத்தில் கோல் அடிக்கும் வாய்ப்பை ரோமல் மோரல்ஸ் தவறவிட்டார்.

71-ஆவது நிமிடத்தில் அரிஃப் ஐமான் தட்டிக் கொடுத்த பந்தின் வழி கார்பின் ஓங் அணிக்கான இரண்டாம் கோலை புகுத்திய நிலையில் தேசிய அணி வெற்றிப் பெற்றது.

எதிர்வரும் ஜூன் 10-ஆம் தேதி வியட்நாமையும் அக்டோபர் 9-ஆம் தேதி Laos-யையும் மலேசிய சந்திக்க திட்டமிட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)