விளையாட்டு

இவ்வாரத்தில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து

25/03/2025 07:15 PM

லண்டன், 25 மார்ச் (பெர்னாமா) -- 2026 உலகக் கிண்ண தகுதி சுற்று...

தனது புதிய நிர்வாகி தோமஸ் டுச்செல் பயிற்சியின் கீழ், இங்கிலாந்து அணி, இவ்வாரத்தில் அதன் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

இன்று அதிகாலை, வெம்பிலி அரங்கில் நடைபெற்ற K குழுவிற்கான ஆட்டத்தில், 3-0 எனும் கோல்களில் அது Latvia-வை வீழ்த்தியது.

ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ரீஸ் ஜேம்ஸ் அவ்வணிக்கான முதல் கோலை அடித்த நிலையில், முதல் பாதி ஆட்டம் 1-0 என்ற கோல் கணக்கில் நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து, தனது சொந்த இடத்தில் விளையாடிய இங்கிலாந்து, 68-வது நிமிடத்தில் அதன் தாக்குதல் ஆட்டக்காரரான ஹெரி கேன் மூலம், இரண்டாவது கோலை பெற்றது.

இறுதியாக, ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில், மாற்று ஆட்டக்காரரான எபெரெச்சி ஈஸ் அடித்த மூன்றாவது கோலுடன் ஆட்டம் நிறைவுக் கண்டது.

மற்றொரு நிலவரத்தில், முதல் தகுதிச் சுற்றில், இங்கிலாந்திடம் 0-2 என்ற கோல் கணக்கில் அல்பானியா தோல்வியடைந்தாலும், அதன் சொந்த மண்ணில் அன்டோராவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)