புளோரிடா, 22 மார்ச் (பெர்னாமா) -- இதனிடையே, ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில், அல்கராஸ் தோல்வி கண்டு தமது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தினார்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அல்கராஸ், டேவிட் கோஃபினுடன் விளையாடினார்.
இதில் முதல் செட்டில் 7-5 என்று அல்கராஸ் வெற்றி பெற்றாலும், அடுத்த இரண்டு செட்களில் 4-6, 3-6 என்ற புள்ளிகளில் அவர் தோல்வியைத் தழுவினார்.
மற்றொரு நட்சத்திர ஆட்டக்காரரான டேனியல் மெட்வெடேவும், அல்கராஸ்சின் வழியை பின்பற்றி போட்டியில் இருந்து விடைபெற்றார்.
ஜாம் முனாருடன் மோதிய மெட்வெடேவ், 6-2 6-3 என்று புள்ளிகளில் தமது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
இந்த ஆட்டம் 78 நிமிடங்கள் வரை நீடித்தது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]