பேங்காக், 22 மே (பெர்னாமா) -- தாய்லாந்தில் கஞ்சா வகை போதைப்பொருள் மருத்துவ நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய மருத்துவச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் சோம்சக் தெப்சுடின் தெரிவித்திருக்கிறார்.
தாய்லாந்தில் கஞ்சா பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக இது அமைவதாக சோம்சக் கூறினார்.
இந்நடவடிக்கை மூலம் புகைபிடிக்கக் கஞ்சாவைப் பயன்படுத்துபவர்கள் மருத்துவச் சான்றிதழ்களைக் கொண்டிருக்க வேண்டும்.
"வெளிநாட்டினராக இருந்தாலும் சரி, உள்ளூர் மக்களாக இருந்தாலும் சரி, கஞ்சாவைப் பயன்படுத்துவதற்கு அவர்கள் மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
"சட்டத்தைத் தொடர்ந்து அமல்படுத்தவும், இது தொடர்பாக எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருக்கவும் அரசு நிறுவனங்களுக்கு நாங்கள் வழிகாட்டுவோம்," என்று அவர் கூறினார்.
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தாய்லாந்தில் கஞ்சாவைப் பயன்படுத்துவது குற்றமற்றதாக வகைப்படுத்தப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)