உலகம்

சீனாவில் 650 ஆண்டுகள் பழமையான கோபுரத்தின் கூரை இடிந்து விழுந்தது

21/05/2025 07:10 PM

பெய்ஜிங், 21 மே (பெர்னாமா) --   சீனா, அன்ஹுய் மாகாணத்தில் அமைந்துள்ள 650 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஃபெங்யாங் டிரம் கோபுரத்தின் கூரை இடிந்து விழுந்தது.

சம்பவத்தின் போது அங்கிருந்த சுற்றுப்பயணிகள் வேகமாக இடத்தை விட்டு ஓடும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது. 

எனினும் , இச்சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை.

1375-ஆம் ஆண்டில், மிங் வம்சத்தின் போது இந்த கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, 2017-ஆம் ஆண்டில் கோபுரத்தின் கூரையில் சேதமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
   
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)