இங்கிலாந்து, 21 மே (பெர்னாமா) -- இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணம்.
மென்சஸ்டர் சிட்டி அணி Bournemouth அணியை 3-1 கோல் கணக்கில் தோற்கடித்து, பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது.
அடுத்த பருவத்தில் ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணமான யு.சி.எல்லைU அடைவதற்கான வாய்ப்பையும் இது விரிவுப்படுத்துகிறது.
லீக்கில் ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில், ஐரோப்பாவில் ஓர் இடத்தைப் பிடிப்பதற்கான முயற்சி கடுமையாக இருக்கும்.
எத்திஹாட்டில் நடைபெற்ற ஆட்டத்தின் 14-ஆவது நிமிடத்தில் மென்சஸ்டர் சிட்டியின் ஒமார் மர்மௌஷ் முதல் கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, 38-ஆவது நிமிடத்தில் பெர்னார்டோ சில்வா ஒரு கோலையும், 89-ஆவது நிமிடத்தில் நிகோ கோன்சலஸ் ஒரு கோலையும் புகுத்தியதில் அவ்வணிக்கு வெற்றி சாதகமாகியது.
கூடுதல் நேரத்தில் Bournemouth அணியின் டேனியல் ஜெபிசன் தமது அணிக்கான முதல் கோலை அடித்தும் பயனில்லை.
பட்டியலில் 11-ஆவது இடத்தில் இருக்கும் Bournemouth தமது தோல்வியால் அடுத்த பருவத்தில் ஐரோப்பா அரங்கில் விளையாடும் வாய்ப்பைத் தவறவிட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)