ஷா ஆலம், 17 மே (பெர்னாமா) -- வளாகம் ஒன்றின் முன், தாம் நபர் ஒருவருக்கு பணம் கொடுப்பதாக பரவலாக பகிரப்பட்ட காணொளியைத் தொடர்ந்து, எந்த தவறான செயலிலும் ஈடுபடவில்லை என்று கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவருக்கான வேட்பாளர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மறுத்துள்ளார்.
சர்ச்சைக்குரிய அக்காணொளி பழைய பதிவு என்றும் 2025 முதல் 2028-ஆம் ஆண்டுக்கான கட்சித் தேர்தல் காலக்கட்டத்தில் சில பொறுப்பற்ற தரப்பினரால் வேண்டுமென்றே மீண்டும் உருவாக்கப்பட்ட அவதூறு என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, வளாகத்தின் முன் ரமணன், ஒரு நபருக்கு பணம் கொடுத்து வெளியேறுவதைக் காட்டும் 34 வினாடிகள் கொண்ட காணொளிப் பதிவு பரவலாக பகிரப்பட்டது.
இதனிடையே, இம்முறை நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தல் குறித்து கருத்துரைத்த, கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவு துணைத் தலைவருமான ரமணன், போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், மற்ற நபர்களை அவமதித்தோ அல்லது பழித்துக் கூறியோ இல்லாமல், அடித்தள மக்களுக்கு கவனம் செலுத்தி, ஒழுங்கான முறையில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)