அமெரிக்கா, 14 மே (பெர்னாமா) -- அமெரிக்கா, சிக்காங்கோவில் நடைபெறும் தொழில்முறை ஸ்குவாஷ் சங்கத்தின் உலக ஸ்குவாஷ் போட்டி.
இன்று அதிகாலை நடைபெற்ற மூன்றாவது சுற்றில் உபசரணை நாட்டின் அமான்டா ஷோபியைத் தோற்கடித்து, தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரி காலிறுதிக்கு முன்னேறினார்.
சிக்காங்கோ பல்கலைக்கழக கிளப்பில் நடைபெற்ற இவ்வாட்டத்தை 3-0,11-8, 14-12,11-6 என்ற புள்ளிகளில் சிவசங்கரி கைப்பற்றினார்.
இந்த ஆட்டம் 34 நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்தது.
காலிறுதி ஆட்டத்தில் நான்காம் நிலை வீராங்கனை ஒலிவியா வியெவருடன் சிவசங்கரி மோதவுள்ளார்.
ஆடவருக்கான பிரிவில், நாட்டின் ங் யென் யோவ் தோல்வி கண்டு விட்டு விலகிய நிலையில் உலக தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ள சிவசங்கரி, இப்போட்டியில் நிலைத்திருக்கும் மலேசியாவின் ஒரே பிரதிநிதியாவார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)