கோத்தா கினாபாலு, 11 மே (பெர்னாமா) - சபா மாநில ஆளுநர் துன் மூசா அமான் உடனான சந்திப்பில் அம்மாநில சட்டமன்றத்தை கலைப்பது குறித்து கலந்துரையாடப்படவில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மாநில சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பான முடிவு, அதன் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி முஹமட் நோரின் முழு உரிமையாகும் என்று அன்வார் கூறினார்.
''அனைத்து துறைகளிலும், எண்ணெய் உட்பட இந்த ஒப்பந்தம் சில தீர்மானங்களை அறிவித்த மாநிலம் தொடர்பான சட்டம் ஆகியற்றை பிரதிநிதிக்கிறது. மேலும், நாங்கள் அதை மேம்படுத்துவோம்.
நிருபர்: (சட்டமன்றத்தை) கலைக்கும் சாத்தியம் குறித்து நீங்கள் பேசினீர்களா?
அது இல்லை. அது அவருக்கும் மாநிலத்திற்கும் முதலமைச்சருக்குமான விவகாரம்,'' என்றார் அவர்.
எண்ணெய் உட்பட பல்வேறு துறைகள் குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும், முக்கிய பிரச்சனைகளை கையாளவும் மேம்பாட்டிற்கான துறைகளை அடையாளம் கண்பதற்கும் மாநில தலைவர்களின் பங்களிப்பும் கருத்தில் கொள்ளப்பட்டதாக டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.
இன்று இஸ்தானா ஶ்ரீ கினாபாலுவில் செய்தியாளர்களைச் சந்தித்தப் போது பிரதமர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)