உலகம்

ஆஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்

03/05/2025 07:01 PM

சிட்னி, 03 மே (பெர்னாமா) --   ஆஸ்திரேலியாவிலும் இன்று பொது தேர்தல் நடத்தப்படுகின்றது.

அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

இத்தேர்தலில் இரண்டாம் முறையாக களமிறங்கியுள்ள அந்தோணி அல்பனீஸ் தமது மகன் நாதனுடன் வருகைத் தந்து சிட்னியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

இந்த பொதுத்தேர்தல் ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்குக் கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் நிலவி வரும் விலைவாசி உயர்வு மற்றும் வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

வீட்டுவசதி பற்றாக்குறையைச் சமாளிக்க அடுத்த 5 ஆண்டுகளில் 12 லட்சம் வீடுகள் கட்டப்படும் என கடந்த தேர்த்லில் அல்பனீஸ் உறுதியளித்திருந்தார்.

ஆனால், அது தொடர்பான நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்டாதது அவருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

காலை எட்டு மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு மாலை மணி 6-க்கும் நிறைவடையும் நிலையில், கிழக்கு மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் ஆஸ்திரேலியாவின் பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

சிட்னியில் உள்ள ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையத்தின் வாக்களிப்பு மையங்களில் தொடக்க கட்ட வாக்குகளை எண்ணும் நடவ்வடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)