பொது

மியன்மாருக்கு வழங்கப்படும் எந்தவொரு உதவியும் கட்டுப்பாடின்றி வழங்கப்பட வேண்டும்

03/05/2025 05:06 PM

கோலாலம்பூர், 03 மே (பெர்னாமா) --    மியன்மாருக்கு வழங்கப்படும் எந்தவொரு உதவியும் பாகுபாடு அல்லது கட்டுப்பாடுகள் இன்றி வழங்கப்பட வேண்டும் என்பதில் மலேசியாவும் பிலிப்பைன்சும் உடன்படுகின்றன.

இந்த விவகாரத்தைப் பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் ரோமுவால்டெஸ் மார்கோஸ் ஜே.ஆருடன் மலேசியா ஒப்புக் கொண்டதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பொங்பொங் மார்கோஸ் என்று அழைக்கப்படும் அவருடனான உரையாடலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து சென்றடைவதை உறுதி செய்வதற்காக, மியன்மாரில் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற மலேசியாவின் விருப்பத்தையும் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அதோடு, ஆசியான் மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்தும் அதில் விவாதிக்கப்பட்டது.

உலகளாவிய வரிக் குறித்த பேச்சுவார்த்தைகளில் மலேசியாவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த ஆசியான் தலைமைத்துவத்தை மலேசியா பயன்படுத்தலாம் என்று அன்வார் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)