விளையாட்டு

மாட்ரிட் பொது டென்னிஸ்: அரையிறுதிக்குத் தேர்வாகிய சபலென்கா

01/05/2025 06:07 PM

மாட்ரிட், 01 மே (பெர்னாமா) -- மாட்ரிட் பொது டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்திற்கான பயணத்தில், உலகின் முதல் நிலை வீராங்கனை அரினா சபலென்கா தொடர்ந்து பயணிக்கின்றார்.

இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று, அவர் அரையிறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகினார்.

உக்ரேனின் மார்தா கோஸ்டியுக்-உடன் அரினா சபலென்கா விளையாடினார்.

இவ்வாட்டத்தில் 7-6 7-6 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறினார்.

இவர்களின் ஆட்டம் இரண்டு மணி நேரம் 33 நிமிடங்கள் வரை நீடித்தது.

அரையிறுதி ஆட்டத்தில் சபலென்கா, எலினா ஸ்விடோலினாவுடன் மோதவுள்ளார்.

ஆடவருக்கான சிறந்த 16 ஆட்டங்களில், இத்தாலியில் லோரென்சோ முசெட்டியும் அலெக்ஸ் டி மினௌரும் விளையாடினர்.

ஒரு மணி நேரம் 23 நிமிடங்கள் வரை நீடித்த இவ்வாட்டத்தை 6-4 6-4 என்ற புள்ளிகளில் லோரென்சோ முசெட்டி கைப்பற்றினார்.

காலிறுதி ஆட்டத்தில் முசெட்டி, கேப்ரியல் டியாலோவுடன் விளையாடவுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)