புக்கிட் ஜாலில், 1 மே (பெர்னாமா) -- இன்று கொண்டாடப்படும் 2025-ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமும், பேரரசியார் ராஜா சரித் சிஃபியா-வும், அனைத்து தொழிலாளர்களுக்கும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனர்.
பொருளாதார முன்னேற்றத்திற்கும், சமூகத்தின் நல்வாழ்விற்கும், தொழிலாளர்களின் பங்களிப்பு ஒரு முக்கிய சக்தியாக விளங்குவதாக, முகநூல் பதிவில் அவர்கள் புகழாரம் சூட்டியிருந்தனர்.
அதுமட்டுமின்றி, தொழிலாளர்களின் ஒவ்வொரு முயற்சியும், தியாகமும் இன்று அடையப்பட்ட நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாகும் என்றும் மாட்சிமை தங்கிய மாமன்னர் பாராட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)