உலகம்

சீனா: உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலி

30/04/2025 06:32 PM

பெய்ஜிங், 30 ஏப்ரல் (பெர்னாமா) -- வடகிழக்கு சீனாவில் உள்ள ஒரு உணவகத்தில் நேற்று நிகழ்ந்த தீ விபத்தில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் மூவர் காயமடைந்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான காரணத்தை குறிப்பிடாத சின்ஹுவா, இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சீன அதிபர் சி ஜின்பிங் உத்தரவிட்டதாகக் கூறியது.

தீ விபத்துக்கான காரணத்தை விசாரித்து, அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

லியோயாங் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி பிற்பகல் மணி 12:25-க்கு தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், 85 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 22 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)