கோலாலம்பூர், 09 ஏப்ரல் பெர்னாமா -- ஏப்ரல் 15 தொடங்கி 17ஆம் தேதி வரை சீன அதிபர் ஸி ஜின் பெங் மலேசியாவிற்கு வருகை மேற்கொள்ளவுள்ளார்.
அப்பயணம், இருவழி உறவை குறிப்பாக வர்த்தகத் துறையில் வலுப்படுத்தும் முயற்சியாக அமையும் என்று அமைச்சரவை எதிர்பார்ப்பதாக மடானி அரசாங்க பேச்சாளரும் தொடர்பு அமைச்சருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
இன்று அமைச்சரவைக்கு பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
சீன அதிபரின் மலேசியாவிற்கான பயணம் குறித்த மேல் விவரங்களை விஸ்மா புத்ரா அறிவிக்கும் என்றும் ஃபஹ்மி கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)