நிதி சந்தை வீழ்ச்சி; தனது மீள்தன்மையை வெளிப்படுத்தும் மலேசியா

09/04/2025 06:42 PM

கோலாலம்பூர், 09 ஏப்ரல் பெர்னாமா -- சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால், உலகளாவிய நிதி சந்தை வீழ்ச்சி கண்டிருக்கும் வேளையில், அதனால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் பொருட்டு மலேசிய பங்கு சந்தையும் ரிங்கிட் நாணயமும் தனது மீள்தன்மையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.

உள்ளூர் நிதி நிறுவனங்கள், அரசு தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்கள் GLIC மற்றும் இதர ஆதரவுகள் மிகவும் வலுவாக இருப்பதால், சந்தையில் பணப்புழக்கம் அதிகமாக உள்ளதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறியுள்ளார்.

''இக்காலகட்டத்தில் வலுவான நிறுவன ஆதரவை நாங்கள் கண்டிருக்கிறோம். எனவே, புர்சா அளவில் நிலையற்ற தன்மை சமாளிக்கக்கூடியது. இந்த காலகட்டத்தில் தடைகளால் புர்சா பாதிக்கப்படவில்லை. இது இன்னும் மீள்தன்மை கொண்டுள்ளது. மேலும் ரிங்கிட்டைப் பொறுத்தவரையில் அது இதுவரை வரம்பிற்குள் உள்ளது. எனவே, இது நாம் நிர்வகிக்கக்கூடிய ஒரு நிலை என்று நான் நினைக்கிறேன்'' என்றார் அவர்.

பிற்பகல் மணி 3.45 அளவில், மலேசிய பங்குச் சந்தை 3.6 விழுக்காடு சரிந்து 1,392.40 ஆக பதிவு செய்யப்பட்டது.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)