பொது

தற்காலிக கார் சேவை வழங்கும் திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுள்ளன

04/04/2025 05:40 PM

புத்ரா ஹைட்ஸ், 04 ஏப்ரல் (பெர்னாமா) --   புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக கார் சேவை வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று வரையில், நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை கோத்தா கெமுனிங் மற்றும் ஶ்ரீ செர்டாங் சட்டமன்ற அலுவலகங்கள் பெற்றுள்ளன.

Chery Malaysia நிறுவனத்தின் 50 தற்காலிக கார்களில் முதல் கட்டமாக பாதிக்கப்பட்ட 25 பேருக்கு இன்று அக்கார்கள் ஒப்படைக்கப்பட்டன.

இதனிடையே, எஞ்சிய 25 கார்கள் திங்கட்கிழமை வழங்கப்படும்.

''இதற்கிடையில், Carsome 50 கார்களும் Carro, 30 கார்களும், Gocar 20 கார்களும் மற்றும் EON 62 கார்களையும் வழங்குவதற்கான வாக்குறுதியைப் பெற்றோம். இன்று வரை இங்கு சீ ஹான் கார் கடனுதவி, டி.ஆர்.பி மற்றும் பேருந்துகள் குறித்து நிர்வகிப்பார்'', என்று அவர் கூறினார்.

புத்ரா ஹைட்ஸ் பள்ளி வாசல் தற்காலி நிவாரண மையமாக மாறியதைத் தொடர்ந்து, அதன் பயன்பாட்டுச் செலவுகளை ஈடுசெய்ய அந்நிறுவனம் ஐம்பதாயிரம் ரிங்கிட்டை வழங்கியது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பிபிஎஸ் இருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கான தங்குமிடம் உட்பட சில நடவடிக்கைகள் குறித்து கலந்து ஆலோசிக்க பெட்ரோனாஸ் பிரதிநிதியைத் தாம் சந்திக்கவிருப்பதாகவும் அமிருடின் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)