உலகம்

அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் சீனா நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

10/04/2025 07:36 PM

பெய்ஜிங், 10 ஏப்ரல் (பெர்னாமா) --    அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளும் சீனா நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.   

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இந்த அறிவிப்பை சீனா அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 

சீனா மற்றும் அமெரிக்காவின் பரஸ்பர, பதிலடி வரி விதிப்பு காரணமாக உலகளவில் பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

எனவே, அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளும் சீன நாட்டு மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.   

இதனிடையே, அமெரிக்காவில் மேற்கல்வியைப் பயிலும் சீன மாணவர்கள் பதுகாப்பு படிநிலைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)