கோலாலம்பூர், 04 ஏப்ரல் (பெர்னாமா) -- மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் தனது செயல்திறனை மேம்படுத்த வகையில் இப்பருவத்தில் பல போட்டிகளில் பங்கேற்க இலக்கு கொண்டுள்ளதாக நாட்டின் மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை சைடாதுல் சாகிரா சைரின் கூறுகிறார்.
பல போட்டிகளில் கலந்து கொள்வதால் பலவீனங்களை மேம்படுத்தவும், உலகின் தலைசிறந்த பந்தய வீரர்களுடன் போட்டியிடும் அனுபவத்தைப் பெறவும் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
''எனவே, எனது நேரத்தையும் நிலையையும் மேம்படுத்தவும், மிக முக்கியமாக முன்னணி குழுவுடனும் பந்தய வீரர்களுடனும் போட்டியிட முடியும். இது எனது திறன்களையும் நிலையையும் மேம்படுத்தி திறன்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்'', என்று அவர் கூறினார்.
ஏப்ரல் 5 மற்றும் 6-ஆம் தேதிகளில், இத்தாலியில் நடைபெறும் ஐரோப்பிய மகளிர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.
இப்பந்தயம் ஒரு புதிய சவால் வழங்குவது மட்டுமல்லாமல், கடந்த பருவத்துடன் ஒப்பிடும்போது தமது திறனை நிரூபிக்கும் தளமாகவும் அமையும் என்று சாகிரா கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)