உலகம்

போர் நிறுத்த பரிந்துரைக்குப் பாலஸ்தீன போராளிக்குழு ஒப்புதல் அளித்துள்ளது

30/03/2025 05:17 PM

கத்தார், 30 மார்ச் (பெர்னாமா) -  காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய நடுவர்களான எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகளிடமிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்ற போர் நிறுத்த பரிந்துரைக்கு பாலஸ்தீன போராளிக்குழு நேற்று ஒப்புக்கொண்டதாக ஹமாஸ் தலைவர் Khalil al-Hayya தெரிவித்தார்.

தெற்கு காசாவில் பாதுகாப்பு மண்டலம் என்று கூறப்படும் பகுதியை விரிவுபடுத்துவதற்காக Rafah -வின் Jneina சுற்றுவட்டாரப் பகுதிகளில் "தரைவழி நடவடிக்கைகளை" தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் நேற்று தெரிவித்திருந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, எகிப்து மற்றும் கத்தாரில் உள்ள நடுவர்களிடம் இருந்து தங்கள் தரப்புக்கு பரிந்துரை ஒன்று முன்வைக்கப்பட்டதை ஹமாஸ் காசா தலைவர் KHALIL AL-HAYYA உறுதிப்படுத்தினார்.

தங்கள் தரப்பு அதை நேர்மறையாகக் கையாண்டு அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார். 

அதே வேளையில், இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை அதற்குத் தடையாக இருக்காது அல்லது நடுவர்களின் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்காது என்று தங்கள் தரப்பு நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மார்ச் 18ஆம் தேதி, இஸ்ரேல் காசாவின் மீது மீண்டும் தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடங்கியது.

பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாசிற்கு அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)