யங்கூன், 29 மார்ச் (பெர்னாமா) -- நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு அனைத்துலக நாடுகள் உதவி வருகின்றன.
அந்த வகையில், இந்தியாவின் முதல்கட்ட நிலநடுக்க நிவாரண உதவி இன்று விமான யங்கூன் நிலையத்தைச் சென்றடைந்தது.
இந்தியாவின் 'Operation Brahma' என்ற முதல்கட்ட மனிதநேய உதவியில், 15 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
கூடாரங்கள், போர்வைகள், உணவுப் பொட்டலங்கள், சுகாதாரப் பொருட்கள், அத்தியாவசிய மருந்துகள் போன்றவை இந்திய விமானப்படையின் விமானம் மூலம் அங்கு கொண்டுச் செல்லப்பட்டு மியான்மர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)