பேங்காக், 29 மார்ச் (பெர்னாமா) -- நேற்று தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.
மேலும், 101 பேரைக் காணவில்லை என்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரும்பாலான இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கியிருந்தனர்.
இன்று காலை அந்நாட்டு தலைநகரில், இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணியை தாய்லாந்து மீட்புக் குழுக்கள் தொடர்ந்தன.
ஆசியாவின் மிகப்பெரிய தலைநகரங்களில் ஒன்றான பேங்காக்கில் நேற்று 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து நகர்ப்புற ரயில் அமைப்புகளும் நிறுத்தம் கண்டதுடன் சாலைகளும் முடங்கின.
இதனால் அந்நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மற்றுமொரு நிலவரத்தில், மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தாய்லாந்திலும் உணரப்பட்டதால் அந்நாட்டில் உள்ள ஆறு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் மோசமாக சேதமடைந்துள்ளன.
அதோடு, அப்பகுதிகள் குடியிருப்பதற்குப் பாதுகாப்பு அற்றவையாக உள்ளது என்று பேங்காக் நகர நிர்வாகம், BMA அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட கட்டிடங்களின் நிர்வாகத் தரப்பில் இருந்து 1,000 அறிக்கைகளைச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேளையில், மதிப்பிடப்பட்டும் வருவதாக பேங்கோக் சாட்சார்ட் சிட்டிபண்ட் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கத்தில், பேங்காக்கில் அதிகமான உயரமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக அவர் கூறினார்.
கட்டிட உள்கட்டமைப்பு மதிப்பிடுவதற்காக நடவடிக்கை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஆறு பொறியியலாளர் நிபுணர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக BMA குறிப்பிட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)