காஷ்மீர், 16 மே (பெர்னாமா) -- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி, பி.ஜே.பிஆதரவாளர்கள் வியாழக்கிழமை இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் பேரணிகளை நடத்தினர்.
இந்தியக் கொடிகளை அசைத்தும், இந்தியாவுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியும் அவர்கள் அதில் பங்கேற்றனர்.
பஹல்காமில் நடைபெற்ற பேரணியில் தங்கும் விடுதி உரிமையாளர்கள், குதிரை சவாரி செய்பவர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் ஆகியோர் இந்திய ஆயுதப் படைகளை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் ஒன்று கூடினர்.
இதனிடையே, ஶ்ரீநகரிலும் தேசிய ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்காக மக்கள் வீதிகளில் திரண்டனர்.
எதிர்காலத்தில் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைக்கும் வலுவான பதில் கிடைக்கும் என்ற செய்தியை எதிர் தரப்பிற்கு தெரிவிக்கும் நோக்கத்தில் ஒன்றிணைந்ததாக அதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)