இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷிமீர், 12 மே (பெர்னாமா) -- கடந்த 19 நாள்களுக்கு பிறகு, இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அமைதியான சூழல் நிலவி வருகிறது.
நேற்றிரவு எல்லையில் ஆளில்லா விமானங்கள், ஏவுகணை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஏதும் நிகழவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளின் எல்லையில் உள்ள சந்தைகள் வழக்க நிலைக்கு திரும்பியுள்ளன.
இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் பஹல்காமில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த ஏழாம் தேதி இந்தியாவின் முப்படைகளும் இணைந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தின.
அமெரிக்காவின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அவ்விரு நாடுகளுக்கு இடையே நேற்று முன்தினம் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)