உலகம்

போர் நிறுத்தம் தொடர்பிலான ஒப்பந்தம்; பாகிஸ்தான் பிரதமர் சாதகமான பதில்

11/05/2025 06:21 PM

இஸ்லாமாபாத், 11 மே (பெர்னாமா) - இந்தியாவுடனான போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, சனிக்கிழமை பாகிஸ்தான் பிரதமர்  ஷெபாஸ் ஷெரீப்அரசாங்கத் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அந்த ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் சாதகமாக பதிலளித்ததை அவர் தமது உரையில் உறுதிப்படுத்தினார்.

உலக மற்றும் வட்டார அமைதி, நிலைத்தன்மை, போர்நிறுத்த ஆலோசனைக்கு நேர்மறையான பதிலை அளித்த லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கை ஆகியவற்றுக்காக தங்கள் தரப்பு ஒரு பொறுப்பான நாடாகச் செயல்பட்டுள்ளதை  ஷெபாஸ் ஷெரீப் சுட்டிக்காட்டினார்.

''நீர்வளம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் பிரச்சனை, நீதியை முன்னிலைப்படுத்துவதன் மூலம், அமைதியான பேச்சுவார்த்தைகளின்படி தீர்க்கப்படும் என்பதில் நாங்கள் முழுமையாக உறுதியாக உள்ளோம்,'' என்றார் அவர்.

அதோடு, மானம், கண்ணியம், சுயமரியாதை ஆகியவை தங்களின் உயிரை விட மிகவும் விலைமதிப்பற்றவை என்று குறிப்பிட்ட அவர், எவரேனும் அதன் தொடர்பில் சவால் விடுத்தால், தங்கள் தரப்பு அதை உறுதியாக பாதுகாக்கும் என்று கூறினார்.

மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பங்கு வகித்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் ஷெரீப் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)