கிரிக், 11 மே (பெர்னாமா) - இன்று அதிகாலை கிரிக் - ஜெலி கிழக்கு - மேற்கு நெடுஞ்சாலையில் கனரக லாரி ஒன்று மோதியதில் ஒரு ஆண் குட்டி யானை உயிரிழந்தது.
700 கிலோகிராம் எடையுள்ள அந்த ஐந்து வயது குட்டி யானை விபத்துக்குள்ளானது குறித்து தமது தரப்புக்கு அதிகாலை மணி 3.30-க்கு தகவல் கிடைத்ததாக பேராக் மாநில வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை, PERHILITAN இயக்குநர் யூசோஃப் ஷாரிஃப் தெரிவித்தார்.
முன்னதாக, கனரக லாரியின் கீழ் சிக்கிக் கொண்ட குட்டி யானையை காப்பாற்ற அதன் தாய் யானை லாரியை நகர்த்த முயற்சிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.
தாய் யானை PERHILITAN உறுப்பினர்களால் மீட்கப்பட்டு, பொருத்தமான மற்றும் பாதுகாப்பான வாழ்விடத்தில் மீண்டும் விடப்படும் என்று யூசோஃப் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)