பொது

ஏ.ஐ பயன்பாட்டிற்கு பெர்னாமா முக்கியத்துவம் அளிக்கும்

02/05/2025 04:52 PM

ஜாலான் பெர்னாமா, 02 மே (பெர்னாமா) -- நாட்டின் முக்கிய செய்தி நிறுவனமாகச் செயலாற்ற  தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப, குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ பயன்பாட்டிற்கு மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமா முக்கியத்துவம் அளிக்கும்.

ஊழியர்கள் உத்வேகமாகச் செயல்பட பெர்னாமாவுக்கு வழங்கப்பட்ட  சிறந்த ஊடக விருது அங்கீகாரத்துடன் இந்நடவடிக்கை அமைவதாக பெர்னாமா தலைமை நிர்வாக அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.

''நிர்வாகத்தில் உள்ள நாங்கள், தொழில்நுட்பத்திற்கு ஏற்ப எங்கள் உபகரணங்களை மேம்படுத்துவதன் மூலம் இதைச் சமநிலைப்படுத்த முயல்கிறோம். மேலும், பெர்னாமாவில் உள்ள நாங்கள், தொடர்ச்சியான ஏ.ஐ பயிற்சி மற்றும் படிப்புகள் மூலம் ஏ.ஐ பயன்பாட்டில் கவனம் செலுத்துகிறோம்,'' என்று அவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை, பெர்னாமா வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் நூருல் அஃபிடா அவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் பெர்னாமா செயலியிலும், ஏ.ஐ. பயன்பாடு இருப்பதை பெர்னாமா உறுதி செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு தேசிய தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தின்போது, நிறுவனப் பிரிவில், சிறந்த ஊடக விருது, மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமா-விற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)