புக்கிட் ஜாலில், 01 மே (பெர்னாமா) - மடானி தொழிலாளர் அட்டை திட்டம் மூலம் அத்தியாவசிய பொருள்கள் மற்றும் சேவையை வழங்கும் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடமிருந்து, 10 லட்சம் தொழிற்சங்க உறுப்பினர்கள் 30 விழுக்காடு வரை கழிவைப் பெறுவார்கள் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
''தொழிலாளர் அட்டை வைத்திருக்கும் எந்தவொரு தொழிற்சங்க உறுப்பினருக்கும் அந்த வசதியில் கழிவு வழங்கும் வகையில், தொழிலாளர் அட்டை தொடர்பான அறிக்கையை நான் விநியோகிப்பேன், நீங்கள் அதைப் படிப்பீர்கள்,'' என்று அவர் குறிப்பிட்டார்.
மடானி தொழிலாளர் அட்டை தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் ஊடக அறிக்கை மூலம் அறிவிக்கப்படும் என்று அவர் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)