கோலாலம்பூர், 30 ஏப்ரல் (பெர்னாமா) -- இவ்வாண்டு ஆகஸ்ட் முதலாம் தேதி தொடங்கி, கோழி முட்டைகளுக்கான உதவித் தொகையை முழுமையாக நிறுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கோழி முட்டைகள் மீதான விலை கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வரும் என்றும் உதவித் தொகை முழுமையாக நிறுத்தப்படுவதற்கு முன்னதாக, ஒரு முட்டைக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை, நாளை தொடங்கி 10 சென்னில் இருந்து ஐந்து சென்னுக்கு குறைக்கப்படும் என்றும் விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு, KPKM (கே.பி.கே.எம்) இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த நோன்பு பெருநாள் காலக்கட்டம் முழுவதும், போட்டி விலையுடன் போதுமான அளவில் முட்டைகளின் விநியோகம் இருந்தது, அதனைப் புலப்படுத்துவதாக கே.பி.கே.எம் சுட்டிக் காட்டியது.
விலைக் கட்டுப்பாட்டு காலத்தை கருத்தில் கொண்டு கோழி முட்டைகளுக்கான உதவித் தொகைகளில், மறுஇலக்கு செய்வதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
உள்ளூர் முட்டை உற்பத்தி துறைக்கும் நாட்டின் நிதிக்கும், நீண்ட காலத்திற்கு உதவித் தொகைகளை வழங்கும் நடவடிக்கை நீட்டிக்க கூடாது என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தற்போது வெளிநாட்டினரும் அதிக ஊதியம் பெறும் தரப்பினர்கள் உதவித் தொகைகளினால் பயனடைவதால், அதற்கு மறுஇலக்கு செய்யும் நடவடிக்கை நியாயமானது என்றும் அது தெளிவுப்படுத்தியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)