சிங்கப்பூர், 23 ஏப்ரல் (பெர்னாமா) -- சிங்கப்பூரில் மே 3ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சியை பிரதிநிதிக்கும், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வொங்கும் அவரின் குழுவினரும், சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, SDP வேட்பாளர்களை எதிர்த்து நேரடிப் போட்டியை எதிர்கொள்ளவுள்ளனர்.
"இந்த குழு அமைக்கப்பட்டதிலிருந்து உங்களுடன் பயணம் செய்கிறேன். எங்களுக்கு மீண்டும் வாக்களியுங்கள். உங்களின் வாழ்க்கையை மேம்படுத்த நாங்கள் சிறந்தவற்றைச் செய்வோம். இந்தத் தேர்தலில் நிறைய விவகாரங்கள் உள்ளன. உங்களின் வாக்குகள் உங்களின் எதிர்காலத்தையும் உங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் உறுதிசெய்யும்", என்று கூறினார்.
பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நடைபெற்றது.
மொத்தமுள்ள 18 குழுத்தொகுதிகளில் ஆகப் பெரிய குழுத்தொகுதியான அங் மோ கியோவில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
அத்தொகுதிகளில் மூன்று கட்சிகள் போட்டியிடுவது சிங்கப்பூர் வரலாற்றில் இதுவே முதன்முறை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)