கோலாலம்பூர், 23 ஏப்ரல் (பெர்னாமா) -- அனைவரின் நலனுக்காக வரி பிரச்சினைக்கு சிறந்த தீர்வைக் கண்டறிவதில் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு, MITI உறுதி கொண்டுள்ளது.
இரண்டு நாள்கள் அலுவல் பயணம் மேற்கொண்டு அமெரிக்கா, வாஷிங்டனுக்கு சென்றிருக்கும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ், அமெரிக்க அரசாங்க மூத்த அதிகாரிகளைச் சந்திப்பதற்கு முன்னர், வாஷிங்டனில் MITI குழுவுடன் கலந்துரையாடினார்.
மலேசியா-அமெரிக்காவின் வர்த்தக உறவை வலுப்படுத்த அண்மைய வியூகங்களையும் முயற்சிகளையும் ஆராயும் நோக்கில் அந்தக் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக தெங்கு சஃப்ருல், இன்று தமது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டார்.
அவர், நாளை, வாஷிங்டனில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீரையும் சம்பந்தப்பட்ட இதர அதிகாரிகளையும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், வர்த்தக மன்றங்கள், நிறுவனங்கள் மற்றும் குழுக்களையும் சந்திப்பதற்கான வாய்ப்பை மலேசிய பேராளர் குழு பெறும் என்று அண்மையில் ஊடகங்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் தெங்கு சஃப்ருல் கூறியிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)